Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘அனைவரும் முக்கியம்’ எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு ஊர்வலம்!

In இலங்கை
Updated: 10:46 GMT, Dec 1, 2017 | Published: 10:00 GMT, Dec 1, 2017 |
0 Comments
1124
icon_com
This post was written by : Ravivarman
5-3

எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் ‘அனைவரும் முக்கியம்’ எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு ஊர்வலம் வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்ட பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி கு.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இவ்வூர்வலமானது வவுனியா பொது வைத்திய சாலையில் இருந்து புறப்பட்டு குருமண்காடு ஊடாக மணிக்கூட்டு கோபுரத்தை அடைந்து அங்கிருந்து வவுனியா பஜார் வீதியினூடாக பொதுவைத்தியசாலையை வந்தடைந்தது.

இதன்போது எச்.ஐ.வி எய்ட்ஸ் தொடர்பாக மக்களிற்கும் தெளிவூட்டும் வகையில் கையேடுகள் வழங்கப்பட்டதுடன், இவ்விழிப்புணர்வு ஊர்வலத்தில் முச்சக்கர வண்டிச் சாரதிகள், பொதுமக்கள், தாதியர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை எச்.ஐ.வி எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றும் வவுனியா பொது வைத்தியசாலையில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg