Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பியர் உற்பத்திக்கு அரிசி பயன்படுத்துவதா? கொந்தளித்தார் பந்துல

In இலங்கை
Updated: 11:19 GMT, Dec 1, 2017 | Published: 10:52 GMT, Dec 1, 2017 |
0 Comments
1250
icon_com
This post was written by : Anojkiyan
bandula

பியர் உற்பத்திக்கு அரிசி பயன்படுத்தப்படுவது பாரதூரமான விடயமாகும் என கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

நிதி மற்றும் ஊடக அமைச்சால் நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட மதுவரி தொடர்பான வர்த்தமானி குறித்து, நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “நிதி மற்றும் ஊடக அமைச்சால் நேற்று வெளியிடப்பட்ட மதுவரி தொடர்பான வர்த்தமானியில் அரிசி, சோளம் மற்றும் பழங்கள் பியர் உற்பத்திக்கான மூலப்பொருள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது நாட்டு மக்கள் மூன்று வேளை உண்ணுவதற்கு உணவின்றி வாடுகின்றனர். மேலும் தட்டுப்பாட்டினால் வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படும் நிலையில் பியர் உற்பத்திக்கு அரிசி பயன்படுத்தப்படுவது பாரதூரமான விடயமாகும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg