Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நோர்வூட் சென்ஜோன் டிலரி பகுதியில் தாழிறக்கம்: எட்டு வீடுகள் சேதம்!

In இலங்கை
Published: 10:14 GMT, Dec 1, 2017 |
0 Comments
1167
icon_com
This post was written by : Ravivarman

நோர்வூட், சென்.ஜோன் டிலரி தோட்டப்பகுதியில் தாழிறக்கம் ஏற்பட்டதில் அப்பிரதேசத்தில் உள்ள வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், எட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள், பெரியவர்கள் உட்பட 47 பேர் சென். ஜோன் டிலரி சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தங்க வைக்கப்பட்டவர்களுக்கு அம்பகமுவ பிரதேச செயலகத்தின் இடர் முகாமைத்துவ நிலையத்தினால் கிராம சேகர்கள் ஊடாக சமைத்த உணவு வழங்குவதற்கும் பாய், தலையணை, போர்வைகள், தண்ணீர் போத்தல்கள், பால்மா போன்றன வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

மலையத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாகவே இத்தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் உள்ள வீடுகளின் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளன.

அத்துடன் சில வீடுகளில் சுவர்கள் இடிந்துள்ளதுடன் கூரைகளும் உடைந்து சேதமாகியுள்ளன.

DSC09423 DSC09416

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)