Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளவரசர் ஹரி, எச்.ஐ.வி. விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்

In
Published: 10:37 GMT, Dec 1, 2017 |
0 Comments
1093
icon_com
This post was written by : Suganthini
uk

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது வருங்கால மனைவி மேகன் மாக்கிலும் எச்.ஐ.வி. விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இளவரசர் ஹரியும் அவரது காதலியான மேகன் மாக்கிலும், திருமண பந்தத்தில் இணையவுள்ளதாக, ஹரியின் தந்தையும் இளவரசருமான சார்ள்ஸ் இந்த வாரம் அறிவித்திருந்தார்.

இவர்களின் திருமண அறிவிப்பையடுத்து, முதற்தடவையாக இவர்கள் இருவரும் இணைந்து, உலக எய்ட்ஸ் தினமான இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய இங்கிலாந்திலுள்ள நொட்டிங்ஹாம் பகுதியில் நடைபெறும் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்வில் இவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும், அவ்வூடகம் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg