Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மலையகத்தில் அடை மழையால் விவசாய நிலங்கள் பாதிப்பு!

In இலங்கை
Updated: 11:16 GMT, Dec 1, 2017 | Published: 10:56 GMT, Dec 1, 2017 |
0 Comments
1147
icon_com
This post was written by : Ravivarman
DSC00279

தலவாக்கலை மற்றும் நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பெய்துவரும்  அடைமழை காரணமாக  விவசாய காணிகள் மற்றும் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் டயகம, அக்கரப்பத்தனை, தலவாக்கலை, நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாய காணிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நிரம்பிய வெள்ள நீர் வடிந்தோடி வருகின்றது.

விவசாய காணிகளில் நீர் வற்றும் நிலையில் பாதிக்கப்பட்ட பயிர்களை மேலும் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில்  கிராம சேவகர்கள் சேத விபரங்களை திரட்டி வருவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்விதமான உதவிகளும் இதுவரை கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, டயகம – தலவாக்கலை பிரதான வீதியில் கிளாஸ்கோ பகுதியில் பிரதான வீதி தாழிறங்கியுள்ளதால் அவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறு சாரதிகளுக்கும், மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீதி ஓரங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவுகளை சீர் செய்ய நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

DSC00305 DSC00301 DSC00296 DSC00276 DSC00271

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg