Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கல்கமுவ தல பூட்டுவா யானையை கொலை செய்த மேலும் ஒருவர் கைது!

In இலங்கை
Published: 11:42 GMT, Dec 1, 2017 |
0 Comments
1598
icon_com
This post was written by : Anojkiyan
thal

கல்கமுவ தல பூட்டுவா என்ற யானையை துப்பாக்கி சூடு நடாத்தி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவரிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில், நேற்று (வியாழக்கிழமை) இரவு கைதுசெய்ய செய்யப்பட்ட 5 பேரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹவ நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்போது, தல பூட்டுவா என்ற யானையை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தல பூட்டுவா யானையுடையது என்று சந்தேகிக்கப்படும் கரிமுத்துக்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg