Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கார்த்தியின் படத்தைப் பார்க்கும் சட்டத்தரணிகளுக்கு பணம் வழங்க வேண்டும்: நீதிபதி உத்தரவு!

In சினிமா
Updated: 16:15 GMT, Dec 1, 2017 | Published: 11:14 GMT, Dec 1, 2017 |
0 Comments
1178
icon_com
This post was written by : Vithushagan
_98793940_theeran1

கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள`தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தைப் பார்க்க நியமிக்கப்படும் சட்டத்தரணிகளுக்கு தலா 25 ,000 ரூபா கட்டணம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மதுரையை சேர்ந்த பசும்பொன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழக சீர்மரபினர் பட்டியலில் உள்ள 235 பிரிவு சமூகத்தினரை தவறாக சித்தரித்தும், தரக்குறைவான வார்த்தைகளால் பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதனால் இப்படத்திற்கு இடைக்கால தடை வித்தும், படத்தின் கிடைக்கும் 50 சதவீதம் பணத்தை சீர் மரபினர் சமூகத்தின் மேம்பாட்டு செலவிட வேண்டும் என உத்தரவிட வேண்டும்.” என தெரிவித்திருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி, ”நான் இந்த படத்தை பார்க்கவில்லை, அதனால் என்னால் எந்த கருத்தும் கூறமுடியாது” என தெரிவித்துள்ளார்

மேலும், அந்த படத்தை பார்த்து அதில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து அறிக்கை  சமர்ப்பிக்க , இரண்டு சட்டத்தரணிகளுக்கு தலா 25 ,000 ரூபா கட்டணம் செலுத்த வேண்டும்.  இதை ஏற்றுக்கொள்வாரா என மனுதாரர் கேட்டுத் தெரிவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg