Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீடு இடிந்து விழுந்து வயோதிபர் உயிரிழப்பு!

In இலங்கை
Updated: 11:58 GMT, Dec 1, 2017 | Published: 11:58 GMT, Dec 1, 2017 |
0 Comments
1240
This post was written by : Ravivarman

டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பெய்த கடும் மழையினால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 86 வயதுடைய மூக்கன் மருதாயி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த மூதாட்டி வீட்டில் சமயலறையில் தனிமையில் இருந்த வேளையில் திடீரென சுவர் இடிந்து மூதாட்டியின் மேல் விழுந்ததனால் உயிரிழந்துள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் டயகம பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தற்போது மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளாக தெரிவித்த டயகம பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சீரற்ற காலநிலை நிலவுவதனால் மண்சரிவு அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

Photo (7) - Copy Photo (2)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg