Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவசர நிவாரண உதவியாக 10,000 ருபா வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்!

In இலங்கை
Published: 13:22 GMT, Dec 1, 2017 |
0 Comments
1195
icon_com
This post was written by : Anojkiyan
Mahinda-Samarasinghe

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவியாக 10,000 ருபா வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

அதற்குத் தேவையான நிதி அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போதே துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைக் குறிப்பட்டார்.

மேலும், மக்களுக்கு கிடைக்கின்ற காசோலைகளை மாற்றிக் கொள்வதற்காக களுத்துறை மாவட்டத்தில் இயங்குகின்ற அனைத்து அரச வங்கிகளையும் நாளைய தினம் திறக்குமாறும் வங்கிப் பொது முகாமையாளர்களிடம் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களும் நாளை (சனிக்கிழமை) திறக்கப்பட வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg