Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொட்டாவை துப்பாக்கி சூடு: விசாரணைகளை மேற்கொள்ள மூன்று விசேட குழுக்கள் நியமனம்

In இலங்கை
Published: 14:56 GMT, Dec 1, 2017 |
0 Comments
1115
icon_com
This post was written by : Anojkiyan
gun-generic_650x400_71492513551

கொட்டாவை – பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூன்று விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்துறை தெரிவித்துள்ளார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகத்துக்குரியவர்கள் தொடர்பிலான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தத் தகவல்களுக்கு அமைய, குறித்த கொலைச் சம்பவமானது பாதாள உலக குழுக்களுக்கு இடையிலான மோதலாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸ்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில், களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த சமயங் என்பவருடன், மரணமடைந்த பெண் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்ததாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், அங்கொட லொக்கா என அழைக்கப்படும் பாதாள உலக குழு உறுப்பினரின் ஆதரவாளர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கொட்டாவை, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வீட்டிலிருந்த பெண்ணொருவர் நேற்று இரவு (வியாழக்கிழமை) சுட்டுக்கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)