Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அர்ஜுன!

In இலங்கை
Published: 15:24 GMT, Dec 1, 2017 |
0 Comments
1130
icon_com
This post was written by : Anojkiyan
arjuna

அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் தொழிலுக்கு ஆபத்து ஏற்படுமாயின், அரசாங்கத்தில் இருந்தவாரே அதற்கு எதிரான நடவடிக்கையை எடுப்பேன் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

54வது பிறந்த நாளை கொண்டாட இன்று (வெள்ளிக்கிழமை) காலை தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டதோடு அஸ்கிரிய மற்றும் மல்வது பீட தலைவர்களின் நல்லாசிகளையும் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அம்பாந்தோட்டை துறைமுக ஊளியர்களின் தொழிற் பாதுகாப்பு தொடர்பாக நான் தனிப்பட்ட முறையில் சீன நிறுவனத்துடன் பேசியுள்ளேன். நான் ஒருவரை கூட தொழிலில் இருந்து நீக்க வேண்டாம் என்றேன் ஆனால் இன்று அந்த அமைச்சு எனக்குரியதல்ல. ஆனால் இன்றும் நான் எனது கருத்தில் உறுதியாக இருக்கின்றேன். அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் தொழிலுக்கு ஆபத்து ஏற்படுமாயின் நான் அரசாங்கத்தில் இருந்தவாரே அதற்கு எதிரான நடவடிக்கையை எடுப்பேன்.

கட்சித் தலைவர்கள் எந்த தீர்மானங்களையும் எடுக்கலாம் ஆனால் மக்கள் கொடுத்த தேர்தல் ஆணைக்கு எதிராக இருக்கக் கூடாது. இந்த நாட்டு மக்கள் அதிகாரத்தை இந்த இரண்டு தலைவர்களுக்கும் கொடுத்தமை ஒன்றாக செல்லவே.  ஆனால் இதை மாற்ற நினைப்பது மக்கள் கொடுத்த ஆணைக்கு ஒரு பலத்த அடி. இது பற்றி அவர்களே முடிவெடுக்க வேண்டும். நான் ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ அரசியல் சொல்லித்தர வேண்டியதில்லை. ஆனால் மக்கள் இருவரையும் விரும்பியமை ஒன்றாக நாட்டை ஆட்சிசெய்யவே. இல்லாவிட்டால் ஒரு கட்சிக்கு மட்டுமே மக்கள் அதிகாரத்தை கொடுத்திருப்பார்கள்.

ஆனால் இரண்டு கட்சிகளுக்குமே அதிகாரத்தை கொடுத்தமை சேர்ந்து நாட்டை அபிவிருத்தி செய்யவே. இதனையே சோபித தேரரும் விரும்பினார். இதை நாங்கள் முன்னெடுத்துச் செல்லவேண்டும். காரணம் இதனால் நாங்கள் நிறைய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)