Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேரீச்சம்பழ கேக் செய்வது எப்படி?

In
Updated: 16:53 GMT, Dec 1, 2017 | Published: 16:45 GMT, Dec 1, 2017 |
0 Comments
2142
icon_com
This post was written by : Anojkiyan
datewalnut4

தேவையான பொருட்கள்

பேரீச்சம்பழம் – 800 கிராம்
கோதுமை மா – 500 கிராம்
பட்டர் – 500 கிராம்
சீனி – 450 கிராம்
முட்டை – 8 முட்டை
கஜூ  – 300 கிராம்
வனிலா – விருப்பத்திற்கு ஏற்ப
தேயிலை தூள் – 50 கிராம்
பேக்கிங் பவுடர் – 2 மேசைக்கரண்டி

செய்முறை:

பேரீச்சம்பழ கேக்கை செய்வதற்கு ஒருநாள் முன்னதாகவே அதாவது, முதல் நாள் இரவு பேரீச்சம்பழத்தின் விதை நீக்கி சிறுசிறு துண்டங்களாக வெட்ட வேண்டும். அத்துடன் கஜூவை சிறு சிறு துண்டங்களாக வெட்ட வேண்டும். பின்பு இவை இரண்டையும் பெரிய பாத்திரத்தில் போட்டு தேநீரில் ஊற வைக்கவேண்டும்.

அடுத்தநாள், கேக்கை செய்யும் முன்னர் பட்டர், சீனி, முட்டை மூன்றையும் ஒன்றாய் சேர்த்து சீனி கரையும் வரை நன்றாக கரைக்க வேண்டும். பிறகு கோதுமைமா, பேக்கிங் பவுடர் கலந்து கரைத்த கலவையுடன் கலக்கவும். பின்பு வெனிலா போட்டு கலக்கவும்.

அதன்பிறகு பேரீச்சம்பழத்தை போட்டு ஒரளவாக கலக்கவும். அதன் பின்பு அளவான கேக் தட்டில் பட்டர் தடவி அதில் கேக் கலவையை தட்டின் அரை வாசி உயரத்திற்கு ஊற்றி நன்றாக பரப்பி 250 டிகிரியில் 20 நிமிடங்கள், அதன் பின்பு 200 டிகிரியில் 20 அல்லது 25 நிமிடங்கள் பேக் செய்யவும். இதோ சுவையான பேரீச்சம்பழ கேக் தயார்!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg