Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலியாவின் உலக சாதனையை சமன் செய்யுமா இந்தியா?

In கிாிக்கட்
Updated: 03:19 GMT, Dec 2, 2017 | Published: 03:19 GMT, Dec 2, 2017 |
0 Comments
1405
icon_com
This post was written by : Risha
indi

அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் உலக சாதனையை சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணி, இன்று (சனிக்கிழமை) இலங்கையை எதிர்கொள்கின்றது.

அவுஸ்ரேலிய, இங்கிலாந்து அணிகள், தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ள நிலையில், அதனை சமன் செய்யும் குறிக்கோளுடன் இந்தியா, இலங்கைக்கு எதிரான இறுதி டெஸ்டில் விளையாடுகின்றது.

இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது.

இவ்விரு அணிகளுக்கும் இடையே கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் மழையினால் சமநிலை அடைந்தது.

நாக்பூரில் நடந்த 2ஆவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் இன்று நடைபெறுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg