Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரியல் மட்ரிட் அணியிலிருந்து கரேத் பேல் விலகினார்

In உதைப்பந்தாட்டம்
Updated: 03:59 GMT, Dec 2, 2017 | Published: 03:59 GMT, Dec 2, 2017 |
0 Comments
1054
icon_com
This post was written by : Risha
bale-real-madrid_4106678

லா லிகா கால்பந்து தொடரின் அத்லெடிக் பில்பாயோ அணிக்கெதிரான போட்டியில், ரியல் மட்ரிட் அணியின் முன்னணி வீரர் கரேத் பேல் இடம்பெறமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

லா லிகா கால்பந்து தொடரில், ரியல் மட்ரிட் மற்றும் அத்லெடிக் பில்பாயோ ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்நிலையில், கரேத் பேலுக்கு பதிலாக உபாதை காரணமாக கடந்த 15 நாட்களாக ஓய்விலிருந்த செர்ஜியோ ரமோஸ் இன்றைய போட்டியில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் இரண்டு முறை காயம் காரணமாக அணியிலிருந்து விலகியிருந்த கரேத் பேல், இன்றைய போட்டியில் விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கு முன்னோட்டமாக கிங்ஸ் கோப்பைக்கான போட்டி ஒன்றிலும் களம் இறங்கினார். இதனால் நாளைய போட்டியில் களம் இறங்குவார் என்று உறுதியாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அணியிலிருந்து விலகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)