Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பங்களாதேஷில் ரோஹிங்கியா அகதிகளுடன் பரிசுத்த பாப்பரசர் சந்திப்பு

In
Published: 04:20 GMT, Dec 2, 2017 |
0 Comments
1191
icon_com
This post was written by : Suganthini

பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ள ரோஹிங்கியா அகதிகளை, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

ரோஹிங்கியா முஸ்லிம்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், மியன்மார் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு பாப்பரசர் விஜயம் செய்துள்ளார்.

மியன்மாருக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு பங்களாதேஷ் திரும்பியுள்ள பாப்பரசர், ரோஹிங்கியா அகதிகளை நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, தாம் பட்ட அவலங்களை பாப்பரசரிடம், ரோஹிங்கியா அகதிகள் விவரித்துள்ளனர்.

இந்நிலையில் ரோஹிங்கியா முஸ்லிம்கள்  என்று விழித்து கருத்துத் தெரிவித்த பாப்பரசர், சமூகத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மதிக்கப்பட வேண்டுமெனவும்  வலியுறுத்தியுள்ளார்.

மியன்மாருக்கு பாப்பரசர் விஜயம் செய்தபோது, ‘ரோஹிங்கியா முஸ்லிம்கள்’ என்று அழைப்பதைத் தவிர்த்துவந்தார். இருப்பினும், பங்களாதேஷில் ‘ரோஹிங்கியா முஸ்லிம்கள்’ என்று விழித்து அவர் உரையாற்றியுள்ளார்.

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ‘ரோஹிங்கியா முஸ்லிம்கள்’ என்று பயன்படுத்த வேண்டுமென பாப்பசரிடம்,  மனித உரிமைக் குழுக்கள் வலியுறுத்தியிருந்தன. இருப்பினும், அவ்வாறு பயன்படுத்துவது, அந்நாட்டிலுள்ள கத்தோலிக்கர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்துமென்று பாப்பசரிடம், மியன்மாரிலுள்ள கத்தோலிக்கத் திருச்சபை கூறியிருந்தது. இந்நிலையிலேயே, மியன்மாரில் ‘ரோஹிங்கியா முஸ்லிம்கள்’ என்று அழைப்பதை பாப்பரசர் தவிர்த்திருந்தார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதியிலிருந்து மியன்மாரின் ராஹினி மாநிலத்தில் நிலவிவரும் வன்முறை காரணமாக, சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம்கள் பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg