Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வின் வெற்றி உறுதி: எடப்பாடி

In இந்தியா
Updated: 04:26 GMT, Dec 2, 2017 | Published: 04:26 GMT, Dec 2, 2017 |
0 Comments
1151
This post was written by : Vithushagan

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கோவை செல்வதற்காக விமான நிலையம் சென்ற முதலவர் எடப்பாடி பழனிசாமி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ” தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், நாங்கள் பதவி ஏற்றதும் இந்த ஆட்சி ஒரு மாதம், 2 மாதத்தில் கவிழ்ந்து விடும் என்று கூறினார். பின்னர் சட்டப்பேரவையின் வரவுசெலவுதிட்ட கூட்டத்தொடரின் போது ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று நினைத்தார். அதுவும் முடியவில்லை.

பின்னர் மானியக்கோரிக்கையின் போது கலைத்து விடலாம் என்று நினைத்தார். அதுவும் நடக்கவில்லை. இந்த அரசை எப்படியாவது கவிழ்த்து விடலாம் என்ற எண்ணத்திலேயே தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

அவரின் எண்ணங்களை பொய்யாக்கி நாங்கள் கடந்த 10 மாதங்களாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இங்கு அ.தி.மு.க. அவை தலைவர் மதுசூதனன் போட்டியிடுகிறார். அவர் இந்த மண்ணின் மைந்தன். ஆர்.கே.நகர் அ.தி.மு.க. கோட்டையாகும்.

இங்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாங்கள் ஆர்.கே. நகரில் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் தேர்தல் பிரசாரம் ஆரமிக்கவுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg