Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரணில் – மஹிந்த இரகசிய ஒப்பந்தம்: சுதந்திரக் கட்சி இணையாது என்கிறார் அமரவீர

In இலங்கை
Published: 04:40 GMT, Dec 2, 2017 |
0 Comments
1208
icon_com
This post was written by : Arul Jesu
mahida amraveera

மஹிந்த தரப்பையும் இணைந்துக்கொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி என்ற வகையில் முன்னோக்கி பயணிக்க இதுவரை எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கூட்டு எதிரணியில் இருந்து கலந்துரையாடலில் பங்கேற்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் விட்டுக்கொடுப்பின்றி செயற்படுவதாகவும் கூறினார்.

இணங்க முடியாத பல நிபந்தனைகளை கூட்டு எதிரணி முன்வைத்தாக தெரிவித்த அவர், எவ்வாறாயினும் இன்றைய தினம் கை சின்னத்திலா அல்லது வெற்றிலை சின்னத்திலா தேர்தலில் போட்டியிடுவது என்பது குறித்த தீர்மானத்தை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டு எதிரணிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ரகசிய ஒப்பந்தங்கள் இருப்பதாக கூறிய அமரவீர, ரணில் தரப்பு, மஹிந்தவுடன் தனி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆயத்தமாவதாகவும் தெரிவித்தார். மேலும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவை கைது செய்வதற்கான தேவை சுதந்திரக்கட்சியில் எவருக்கும் இருக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)