Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென் ஆபிரிக்கா- இங்கிலாந்து தொடர்களில் இந்திய அணி சாதிக்கும்: திலீப் வெங்சர்க்கார்

In கிாிக்கட்
Updated: 05:15 GMT, Dec 2, 2017 | Published: 05:14 GMT, Dec 2, 2017 |
0 Comments
1179
icon_com
This post was written by : Elakkiya
dilip-vengsarkar-afp_806x605_61512140659

தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் இந்திய அணி மிகவும் சிறப்பாக செயற்படும் என இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை அணியுடனான டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி தொடர்களில் விளையாடிவரும் இந்திய அணி அதனைத் தொடர்ந்து தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.

இந்த தொடர் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த திலீப் வெங்சர்க்கார், “அணியில் அற்புதமான வீரர்கள் உள்ளனர். அதேபோன்று அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள வெளிநாட்டு தொடர்களில் அணித்தலைவர் விராட் கோஹ்லியில் சிறந்த தோற்றத்தை காணமுடியும் என்று நம்புகின்றேன். சர்வதேச கிரிக்கட் சபையின் தரவரிசையில் தற்போது இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. உலகின் அனைத்து கிரிக்கட் அணிகளையும் எமது அணி வெற்றிகொண்டுள்ளது. எனவே எதிர்வரும் தொடர்களில் இந்தியாவின் ஆட்டம் அதிசிறப்பாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தென் ஆபிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர், ஆறு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடர் மற்றும் மூன்று போட்டிகளைக் கொண்ட ரி-ருவென்ரி தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல்போட்டி எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி கேப்டவுனில் நடைபெறவுள்ளது.

அதன்பின்னர் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர், மூன்று போட்டிகளைக் கொண்ட ரி-ருவென்ரி தொடர் மற்றும் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)