Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தவான், ராகுலின் நட்பு தென் ஆபிரிக்க தொடரில் உதவும்: முரளி விஜய்

In கிாிக்கட்
Updated: 05:33 GMT, Dec 2, 2017 | Published: 05:30 GMT, Dec 2, 2017 |
0 Comments
1177
icon_com
This post was written by : Elakkiya
201712020906138375_Friendship-with-KL-Rahul-Shikhar-Dhawan-helps-during_SECVPF

இந்திய அணியின் வீரர்களான   தவான் மற்றும் ராகுலின் நட்பு தென் ஆபிரிக்க தொடர் உட்பட இனிவரும் தொடர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என அணியின் மற்றுமொரு வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை அணியுடனான கிரிக்கட் தொடர்களில் விளையாடிவரும் இந்திய அணி அடுத்து தென் ஆபிரிக்க தொடரில் விளையாடவுள்ளது. இத் தொடர் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் முரளி விஜய் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நானும், தவான் மற்றும் லோகேஷ் ராகுலும் ஆடுகளத்திற்கு வெளியிலும் சிறந்த நண்பர்களாகவே உள்ளோம். இது அணித்தேர்வு விடயத்தில் எமக்கு கைகொடுக்கின்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடும் ஒருவர் நீக்கப்படும் போது அவருக்குள் சிறிது தடுமாற்றம் ஏற்படும். ஆனால் நாம் ஆடுகளத்திற்கு வெளியிலும் நட்புறவுடன் பழகுவதால் எமக்குள் அது பிரச்சினையாக உருவாகுவதில்லை.

பதினொருவர் அணியிலிருந்து எம்மில் ஒருவர் நீக்கப்படும் போது அதனை நாம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்வோம். உணர்வுகளையும் பகிர்ந்துகொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)