Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உதவத்தயார்: பிரதமர் மோடி

In
Published: 05:32 GMT, Dec 2, 2017 |
0 Comments
1095
icon_com
This post was written by : Vithushagan
download

தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஓகி புயல், மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் பழனிச்சாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார். இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் பாதிப்பு, சேத விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என முதல்வரிடம் பிரதமர் உறுதி அளித்துள்ளார். காணாமல் போன மீனவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சேத விவரங்களை மனுவாக தருமாறும் நிவாரணம் அளிப்பதாகவும் அத்தோடு கடலில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் பிரதமர் உறுதி அளித்தார்.

ஓகி புயல் காரணமாக குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிக அளவில் பாதிக்கப்பட்டது குமரி மாவட்டம்தான். ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.

குமரி மாவட்டமே தனித்தீவாக மாறியுள்ளது. பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)