Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகக்கிண்ண கால்பந்து தொடர்- 32 அணிகளும் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

In உதைப்பந்தாட்டம்
Published: 05:50 GMT, Dec 2, 2017 |
0 Comments
1144
icon_com
This post was written by : Elakkiya

ரஷ்யாவில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கான 32 அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் மேற்படி 32 அணிகளும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி 32 அணிகளும் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒன்றுடன் ஒன்று மோதவுள்ளன. ‘ஏ’ பிரிவில், ரஷ்யா, சவுதி அரேபியா, எகிப்து மற்றும் உருகுவே ஆகிய நான்கு அணிகளும் ‘பி’ பிரிவில் போர்த்துக்கல், ஸ்பெய்ன், மொராக்கோ மற்றும் ஈரான் ஆகிய அணிகளும் ‘சி’ பிரிவில் பிரான்ஸ், அவுஸ்ரேலியா, பெரு மற்றும் டென்மார்க் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

அதேபோன்று ‘டி’ பிரிவில் ஆர்ஜென்டீனா, ஐஸ்லாந்து, குரோஷியா மற்றும் நைஜீரியாவும், ‘இ’ பிரிவில், பிறேஸில், சுவிட்ஸர்லாந்து, கொஸ்ராறிகா மற்றும் சேர்ப்பியா ஆகிய அணிகளும், ‘எவ்’ பிரிவில் ஜேர்மனி, மெக்சிகோ, சுவீடன் மற்றும் கொரியா ஆகிய அணிகளும் ‘ஜி’ பிரிவில் பெல்ஜியம், பனாமா, துனீசியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளது.

‘எச்’ பிரிவில் போலந்து, செனகல், கொலம்பியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு அணிகளும் இடம்பெற்றுள்ளன.

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள இந்த போட்டிகள் ரஷ்யாவின் 12 விளையாட்டு மைதானங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)