Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விவேக்குடன் இணையும் தேவயானி!

In சினிமா
Published: 06:20 GMT, Dec 2, 2017 |
0 Comments
2925
icon_com
This post was written by : Surenth
Vivek With Thevaiyani

‘எழுமின்’ திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக்குடன் இணைந்து நடிகை தேவயானி நடிக்கவுள்ளார். ‘பாலக்காட்டு மாதவன்’ திரைப்படத்திற்குப் பிறகு இந்த திரைப்படத்தில் விவேக் கதாநாயகனாக நடிக்கிறார்.

முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த தேவயானி நீண்ட இடைவெளியின் பின்னர் இந்தத் திரைப்படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தை தயாரிப்பாளரான வி.பி.விஜி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வையம் மீடியாஸ் மூலம் தயாரித்து இயக்குகிறார். கணேஷ் சந்திரசேகரன் இசையமைக்க, வினோத் குமார் ஒளிப்பதிவையும், கார்த்திக் ராம் படத்தொகுப்பையும் மேற்கொள்கின்றனர்.

இந்தத் திரைப்படத்தின் பூஜை நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் நடைபெற்ற நிலையில், நேற்றைய தினமே பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg