Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புயல் குறித்து மத்திய அரசு முன்கூட்டியே எச்சரிக்கவில்லை: கேரள முதல்வர் குற்றச்சாட்டு!

In இந்தியா
Updated: 06:35 GMT, Dec 2, 2017 | Published: 06:27 GMT, Dec 2, 2017 |
0 Comments
1131
icon_com
This post was written by : Vithushagan

ஓஹி புயல் குறித்து மத்திய அரசு எந்தவித முன் எச்சரிக்கையையும் சரியான நேரத்தில் கேரள அரசுக்கு தெரிவிக்கவில்லை என முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கேரளாவில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவில் இருந்து மீன்பிடிக்க சென்று நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை கணக்கெடுக்கும் பணியும், அவர்களை உடனடியாக மீட்கும் பணியும் நடந்து வருகிறது.

ஒக்கி புயல் குறித்து மத்திய அரசு எந்தவித முன் எச்சரிக்கையையும் குறித்த நேரத்தில் கேரள அரசுக்கு தெரிவிக்கவில்லை. ஐதராபாத்தில் உள்ள பேரழிவு மேலாண்மை துறையும் கேரள அரசுக்கு இதுபற்றி எந்த எச்சரிக்கையும் செய்யவில்லை. நேற்று பிற்பகல்தான் புயல் குறித்த எச்சரிக்கை எங்களுக்கு கிடைத்தது.

இதன் காரணமாகவே கேரளாவில் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. முன் எச்சரிக்கை கிடைக்காத காரணத்தால் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப முடியவில்லை. அவர்களை பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)