Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓஹி சூறாவளி இலங்கைக்கு அப்பால் சென்றாலும், மழைக்கான வாய்ப்பு

In இலங்கை
Published: 06:42 GMT, Dec 2, 2017 |
0 Comments
1167
icon_com
This post was written by : Arul Jesu

ஓஹி சூறாவளி கொழும்பில் இருந்து மேற்கு திசையில் 850 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அரபுக் கடலில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளி தொடர்ந்தும் இலங்கைக்கு அப்பால் நகர்வதால் இலங்கைகு ஏற்படும் தாக்கம் குறைவடையும் என திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலியீன் தெரிவித்தார்.

எனினும் வடக்கு, கிழக்கு, ஊவா, தெற்கு, மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்வதற்குரிய வாய்புள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் 50 கிலோ மீற்றர் வேகத்தில் வலுவான காற்று வீசும் எனவும், கடல் பகுதிகளை பொறுத்தளவில் சற்று கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

வானிலை தொடர்பான மேலதிக தகவல்களை தருகின்றார் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலியீன்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)