Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய வீரர்கள் ஆடுகளத்தில் வரம்புமீறுவதில்லை: ஸ்டீவ் ஸ்மித்

In கிாிக்கட்
Updated: 07:34 GMT, Dec 2, 2017 | Published: 07:34 GMT, Dec 2, 2017 |
0 Comments
1210
icon_com
This post was written by : Elakkiya
australia-v-pakistan-3rd-test-day-4_2c6dc07c-1463-11e7-a5d6-c47fceabb9c0

அவுஸ்ரேலிய கிரிக்கட் வீரர்கள் ஆடுகளத்தில் வரம்புமீறி நடப்பதில்லை என்று அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலிய வீரர்கள் ஆடுகளத்தில் வேண்டுமென்றே எதிரணி வீரர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுவதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்ஸன் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக ஸ்டீவ் ஸ்மித்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்படி பதிலளித்துள்ளார்.

இதன்போது, “பிரிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் நாங்கள் சரியான உத்வேகத்துடன் விளையாடினோம் என்று நினைக்கிறேன். அதே போன்று தொடர் முழுவதும் செயல்படுவோம். ஏற்கனவே கூறியது போன்று களத்தில் நாங்கள் வரம்பு மீறி நடப்பதில்லை. ஆண்டர்சன் எழுதிய கட்டுரையை நானும் பார்த்தேன். அவர் எங்களை மிகப்பெரிய வசைபாடிகள் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. உண்மையை கூற வேண்டுமாயின் வசைபொழிவதில் அவர் தான் மிகவும் மோசமானவர். 2010 ஆம் ஆண்டு போட்டியின் போது அவர் என்னிடமே கோபமூட்டும் வகையில் நடந்து கொண்டார்” என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg