Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டி?

In இந்தியா
Updated: 10:02 GMT, Dec 2, 2017 | Published: 07:23 GMT, Dec 2, 2017 |
0 Comments
1339
This post was written by : Vithushagan

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்  போட்டியிடுவது இன்னும் இரண்டு தினங்களில் தான் தீர்மானம் எடுக்கவுள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் தேர்தலில் போட்டியிடுவார் என கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருன்கின்றது. இது குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், ”ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து யோசித்து வருகிறேன். இன்னும் 2 நாளில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான முடிவு எடுப்பேன்” என்றார்.

சுயேட்சையாக போட்டியிடுவீர்களா? அல்லது அரசியல் கட்சி சார்பில் நிறுத்தப்படுவீர்களா? என்று விஷாலிடம் கேட்டதற்கு, “நான் முடிவு எடுத்த பிறகு எல்லா விஷயங்கள் பற்றியும் சொல்கிறேன்” என்றார்.

இதன் மூலம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் 4ஆம் திகதி மனுதாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் இன்னும் 2 நாளில் முடிவு எடுப்பேன் என்று கூறியிருப்பதன் மூலம் 4 ஆம் திகதி அவர் முடிவு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg