Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் இன்று பெண் உரிமையை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம்

In இலங்கை
Published: 07:55 GMT, Dec 2, 2017 |
0 Comments
1138
icon_com
This post was written by : Arul Jesu

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெண்களுக்கான அரசியல் பிரதிநித்துவத்தை வலியுறுத்தி ‘அவளை தேர்ந்தெடுப்போம், வன்முறையை ஒழிப்போம்’ எனும் தொனிப்பொருளில் கையெழுத்து பெறும் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கையெழுத்து போராட்டமானது இன்று காலை 10 மணியளவில் யாழ்.மத்திய பேரூந்து நிலையத்தில் இடம்பெற்றிருந்தது.

இலங்கையின் பால்நிலை அடிப்படையிலான தேசிய குழுமமும் யாழ்.சமூக செயற்பாட்டு மையமும் இணைந்து இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்த் வேலைத்திட்டத்தில் பங்குபற்ற யாழ்.மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளர் அகிலன், நாட்டில் காணப்படும் பெண்கள் அளவிற்கு அரசியலில் பெண்களது பிரதிநிதிகள் குறைவாகவே உள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை பெண்கள் வன்முறையை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற தொனிப்பொருளில் ஜந்து வாசகங்கள் அடங்கிய உறுதிமொழியும் இதன்போது எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட பெண்கள் சிறுவர் பாதுகாப்பு பணிப்பாளர் கௌதமன், பால்நிலை சார் மற்றும் ஊடகநிலை வளவாளர் கிருத்திகா மற்றும் மதினிநெல்சன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

vlcsnap-2017-12-02-11h36m49s299

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg