Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல்போன நபர் மடு பகுதியில் சடலமாகக் கண்டெடுப்பு

In இலங்கை
Published: 08:07 GMT, Dec 2, 2017 |
0 Comments
1124
icon_com
This post was written by : Risha

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியில் காணாமல் போன நபர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த 35 தினங்களாக காணாமல் போயிருந்த நிலையில், அவரது சடலம் நேற்று (வெள்ளிக்கிழமை) மடு காட்டுப்பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆண்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 56 வயதுடைய அந்தோனிப்பிள்ளை சன் நீக்கிலாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆண்டாங்குளம் சந்தியில் சிகை அலங்கார நிலையமொன்றை நடத்தி வந்த குறித்த குடும்பஸ்தர், கடந்த ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து அவரை பொலிஸார் தேடி வந்தனர். இந்நிலையில், காட்டுப்பகுதியில் மிகவும் உருக்குழைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக மடு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மடு பொலிஸார் சடலத்தை அங்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

அதன்போது குறித்த சடலம் கடந்த ஒக்டோபர் மாதம் காணாமல் போனவரினது என அவரது உறவினர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

மடு பொலிஸார், கிராம அலுவலகர் மற்றும் விசேட தடவியில் நிபுணத்துவ பொலிஸார் ஆகியோர் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்டதோடு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

gfhf

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)