Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தினகரன் அ.தி.மு.க.வில் உறுப்பினர் இல்லை: எடப்பாடி

In இந்தியா
Published: 09:05 GMT, Dec 2, 2017 |
0 Comments
1075
icon_com
This post was written by : Vithushagan
TTVEPS_Liveday2

தினகரன் அ.தி.மு.க.வில். அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரித்துள்ளார்.

சேலம் திருவாகவுண்டனூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட மேம்பாலத்தை இன்று (சனிக்கிழமை) திறந்துவைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”ஆர்.கே. நகரில் ஜெயலலிதா வெற்றி பெற்ற பின்னர் பல்வேறு திட்டபணிகளை நிறைவேற்றி உள்ளார். மேலும், திட்டபணிகள் நடந்து வருகிறது. இதனால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

மழையால் பாதித்த பகுதிகளை அமைச்சர் தங்கமணியும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் பார்வையிட்டு வருகின்றனர். மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3 ஆயிரத்து500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சரிந்துள்ளன. இதனை சரிசெய்யும் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனே மின்தட்டுப்பாடு நீக்கப்படும். தினகரன் அ.தி.மு.க.வில். அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது” என தெரிவித்துள்ளார்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)