Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் மீனவர்களின் வலைகளில் பாம்புகள்!

In இலங்கை
Published: 09:10 GMT, Dec 2, 2017 |
0 Comments
1130
icon_com
This post was written by : Ravivarman

மட்டக்களப்பு மாவட்டத்தின், நாவலடியில் இன்று (சனிக்கிழமை) காலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்களின் வலைகளிலும் பாம்புகள் பிடிபட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகின்றது.

அண்மைக் காலமாக, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாது, சிரமத்தின் மத்தியில் தமது வாழ்க்கையை நடத்தினர்.

இந்நிலையில் இன்று மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களுக்கு, இவ்வாறு வலையில் பாம்புகள் சிக்கியுள்ளது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளதோடு, நாட்டில் காலநிலை மாற்றங்கள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளதாவென மக்கள் மத்தியில் அச்சநிலையொன்றும் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்று கடந்த சுனாமி பேரலை ஏற்பட்ட காலத்திலும் பெருமளவான பாம்புகள் மட்டக்களப்பு பகுதியில் படையெடுத்ததால், தற்போது இவ்வாறான அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறாக பெருமளவிலான பாம்புகள் ஏன் பிடிபடுகின்றன என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)