Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியன் சூப்பர் லீக்: ஜாம்ஷெட்பூர் எப்.சி – கொல்கத்தா போட்டி சமநிலை

In உதைப்பந்தாட்டம்
Updated: 09:49 GMT, Dec 2, 2017 | Published: 09:48 GMT, Dec 2, 2017 |
0 Comments
1095
icon_com
This post was written by : Elakkiya
85279-1512146916-800

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற 13 ஆவது லீக் போட்டி கோல்கள் எவையும் பெறப்படாமல் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

ஜாம்ஷெட்பூர் எப்.சி மற்றும் அத்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதிக் கொண்ட போட்டியே இவ்வாறு சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் அறிமுக அணியான ஜாம்ஷெட்பூர் அணிக்கு நேற்றைய போட்டி சொந்த மண்ணில் இடம்பெற்ற போதிலும் கோல்கள் பெறும் வாய்ப்புகள் எதிரணியால் வழங்கப்படவில்லை. அதேபோன்று எதிரணிக்கு கோல்களை கொடுக்க கூடாது என்பதிலும் இந்த அணி தெளிவாகவே இருந்தது.

தொடரில் ஜாம்ஷெட்பூர் அணி எதிர்கொண்ட முதலிரு போட்டிகளும் கோல்கள் பெறப்படாமல் சமநிலையிலேயே நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)