Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முச்சதம் அடிக்க ஆர்வமாக உள்ளேன்: ரோஹித் ஷர்மா

In கிாிக்கட்
Updated: 10:41 GMT, Dec 2, 2017 | Published: 10:41 GMT, Dec 2, 2017 |
0 Comments
1457
icon_com
This post was written by : Elakkiya
Rohit-Sharma

சர்வதேச ஒருநாள் போட்டியில் முச்சதம் அடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த ரோஹித் ஷர்மா, “ஒருநாள் போட்டியில் முச்சதம் அடிப்பது மிகவும் சவாலானது. அதற்கு கடுமையாக முயற்சி செய்வேன். நான் களம் இறங்கும்போது இரசிகர்கள் 300 ஓட்டங்களை குவிக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

கிரிக்கட்டின் சகாப்தம் சச்சின் டென்டுல்கர் கடந்த 2010 ஆம் ஆண்டு முதலில் இரட்டைச் சதம் அடித்தார். அதன்பின்னர் ஐந்து சதங்கள் அடிக்கப்பட்டன.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையில் ரோஹித் ஷர்மா உள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி பெங்களூர் மைதானத்தில் நடைபெற்ற அவுஸ்ரேலியாவுக்கு எதிரான போட்டியில் 209 ஓட்டங்களையும் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் 264 ஓட்டங்களையும் ரோஹித் ஷர்மா குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg