Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருக்கார்த்திகை விளக்கீடு நாளை!

In ஆன்மீகம்
Published: 11:06 GMT, Dec 2, 2017 |
0 Comments
1255
icon_com
This post was written by : Ravivarman

இந்து மக்களால் நாளை கொண்டாடப்படும் திருக்கார்த்திகை விளக்கீட்டிற்காக இன்று (சனிக்கிழமை) சிட்டி விளக்குகளை மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கொள்ளவனவு செய்து வருகின்றனர்.

யாழ் திருநெல்வேலி, மற்றும் யாழ் நகர் கடைத்தொகுதிகளில் இவ்வாறான விளக்கு சிட்டிகளை மக்கள் ஆர்வத்துடன் கொள்ளவனவு செய்து வருகின்றனர்.

விளக்கீட்டு நாளன்று வீட்டு வாசலில் வாழைக்குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப்பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி மக்கள் வழிபடுவர்.

ஆலயங்களின் முன்புறத்தே வாழைமரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து சொக்கப்பானைக்குள் அக்கினியிட்டு ஜோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் ஜோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து அன்றைய நாளினை மக்கள் வழிபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

vv vc

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)