Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குற்றவாளிகள் கட்சித் தலைவராக இருக்கத் தடை: உச்சநீதிமன்றில் வழக்குத் தாக்கல்!

In இந்தியா
Published: 11:28 GMT, Dec 2, 2017 |
0 Comments
1111
icon_com
This post was written by : Ravivarman
201712021552199726_case-filed-in-supreme-court--that-don-give-party-leader_SECVPF

குற்றவாளிகள் கட்சித் தலைவராக இருக்கத் தடை விதிக்குமாறு கோரி உச்சநீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அஸ்வினிகுமார் உபாத்யாயா என்பவர் உச்சநீதிமன்றில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது, ‘வழக்குகளில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டோரும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டோரும் பல அரசியல் கட்சிகளுக்கு தலைவர்களாக உள்ளதுடன், அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தியும் வருகிறார்கள்.

கொலை, பாலியல் பலாத்காரம், கடத்தல், சட்டவிரோத பணபரிவர்த்தனை, கொள்ளை, தேசத்துரோகம் போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் கூட அரசியல் கட்சிகளைத் தொடங்கி அதன் தலைவர்காளக உள்ளனர்.

இந்த நடவடிக்கையானது 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 29(ஏ) பிரிவில் தெரிவிக்கப்பட்டு இருக்கும் மக்கள் சிறிய குழுக்களாக சேர்ந்து அரசியல் கட்சிகள் தொடங்கி கொள்ளலாம் என்ற பிரிவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

எனவே நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டவர்கள் அரசியல் கட்சிகளை தொடங்குவதற்கும், கட்சிகளின் தலைவர்களாக இருப்பதற்கும், கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும்.

இது தொடர்பான வழி காட்டுதல்களை உருவாக்குமாறு தேர்தல் திணைக்களம் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் அரசியல் அமைப்பு சட்டத்தை ஆய்வு செய்யும் தேசிய ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டு இருக்கும் ஆலோசனைப்படி உட்கட்சி ஜனநாயகத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் திணைக்களத்திற்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும்’ என குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான் வில்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)