Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து சீனாவுடன் பேச கனடா தயாரில்லை

In கனடா
Updated: 11:28 GMT, Dec 2, 2017 | Published: 11:28 GMT, Dec 2, 2017 |
0 Comments
1048
icon_com
This post was written by : Risha
Chinese Premier Li Keqiang and Canadian Premier Justin Trudeau talk as they attend the ceremony of sign agreement documents after a meeting at the Great Hall of the People in Beijing

சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதிலுள்ள சவால்கள் குறித்து கனடா தொடர்ந்தும் சிந்தித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ எதிர்வரும் வாரம், சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையிலேயே அதிகாரிகளின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

பல கட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, கனடாவுடன் முறையான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் சீனா ஆர்வமாக உள்ளது. ஆனால், குறித்த விடயம் தொடர்பில் கனடா தொடர்ந்தும் தெளிவற்ற நிலையில் காணப்படுகிறது.

கனேடிய பிரதமரின் சீன விஜயத்தின் போது பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இதன்போது கவனத்தில் கொள்ளப்படுமா என்பது கேள்விக்குறியாகக் காணப்படுகிறது.

சீனாவிற்கான உத்தியோகப்பூர்வ நான்கு நாள் விஜயத்தை, கனேடிய பிரதமர் எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg