Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனேடிய அரசு தவறிழைத்துவிட்டது: மன்னிப்பு கோரினார் பிரதமர்

In கனடா
Updated: 11:51 GMT, Dec 2, 2017 | Published: 11:51 GMT, Dec 2, 2017 |
0 Comments
1093
icon_com
This post was written by : Elakkiya
s

ஓரினச்சேர்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் விடயத்தில் கனேடிய அரசு தவறு செய்திருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ மன்னிப்பு கோரியுள்ளார்.

கனடாவில் அரச வேலைகள் மற்றும் இராணுவப் பணி போன்ற பொது விடயங்களில் ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் புறக்கணிக்கப்படுவதுடன் பல்வேறு விதமான பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களை பாதுகாக்க தவறியமைக்காக கனேடிய அரசு மன்னிப்பு கேட்கும் என ஏற்கனவே தெரிவித்திருந்த ஜஸ்ரின் ரூடோ அதற்கேற்ப பொதுவெளியில் கண்ணீர்மல்க மன்னிப்பும் கோரியுள்ளார்.

இதன்போது, நாட்டின் குடிமக்களை பாதுகாப்பதே அரசின் முதல்வேலை என்று குறிப்பிட்ட பிரதமர், அதனை தாம் செய்வதற்கு தவறிவிட்டதாகவும் இது அவமானத்திற்கும் வருத்தத்திற்கும் உரியது என்றும் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இதுபோன்ற தவறுகள் இனிவரும் காலத்தில் இடம்பெறாது என்றும் உறுதியளித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg