Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனியில் ஏ.எப்.டி. கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

In ஐரோப்பா
Published: 11:41 GMT, Dec 2, 2017 |
0 Comments
1182
icon_com
This post was written by : Suganthini

ஜேர்மனியில் அதிதீவிர வலதுசாரிக் கட்சியான ஏ.எப்.டி. கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.

ஹனோவர் (Hanover) வீதியில் இன்று (சனிக்கிழமை) ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்படி கட்சிக்கு எதிராக, வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஆர்ப்பாட்டக்கார்களைக் கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் செய்துள்ளனர்.

ஏ.எப்.டி. கட்சியின் புதிய தலைமைத்துவத்தை தெரிவுசெய்யும் நோக்கில்; மாநாடு இன்று நடைபெறுகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மாநாடு சிறிதுநேரம் தாமதமாகித் தொடங்கியதாகவும் ஏ.எப்.டி. கட்சிப் பேச்சாளர் Joerg Meuthen தெரிவித்துள்ளார்.

இம்மாநாட்டில் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொள்வதைத் தடுக்கும் நோக்கில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, ஜேர்மனியில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில், ஏ.எப்.டி. கட்சி 12.6 சதவீதமான வாக்குகளைப் பெற்றிருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg