Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையை நோக்கி மற்றுமொரு புயல்?

In இலங்கை
Updated: 05:49 GMT, Dec 3, 2017 | Published: 03:43 GMT, Dec 3, 2017 |
0 Comments
1862
icon_com
This post was written by : Risha
storm

இலங்கையின் கொழும்புக்கு மேற்காக நிலைகொண்டிருந்த ஓஹி சூறாவளி தற்போது அரேபிய கடல்நோக்கி நகர்ந்துள்ள நிலையில், மற்றுமொரு புயல் இலங்கையை தாக்கும் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது. எனினும், இதனால் இலங்கைக்கு பாரிய பாதிப்புகள் ஏற்படும் என்பது தொடர்பில் உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

இலங்கைக்கு 1700 கிலோமீற்றர் தொலைவில் தெற்கு அந்தமானை அண்டிய பகுதிகளில் இந்த புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. இலங்கைக்கு 1700 கிலோமீற்றர் தொலைவில் தெற்கு அந்தமான் தீவுகளை அண்டிய பகுதியில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குறைந்த தாழமுக்க வலையமானது எதிர்வரும் சில தினங்களில் வலுவடைந்து வங்காள விரிகுடா கடற்பரப்பினூடாக இந்திய நிலப்பரப்பிற்குள் இதன் தாக்கம் ஏற்படக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் தாக்கமானது எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

குறித்த தினங்களில் குறைந்த காற்றழுத்த வலயமானது இலங்கையின் ஊடாக மேற்கு திசையில் செல்ல உள்ளதால் அது வலுவடைந்து புயலாக மாறும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg