Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓஹி சூறாவளியைவிட மஹிந்த சூறாவளியின் தாக்கம் அதிகம்: ஹரிசன்

In இலங்கை
Updated: 05:14 GMT, Dec 3, 2017 | Published: 04:19 GMT, Dec 3, 2017 |
0 Comments
1151
This post was written by : Risha

ஓஹி சூறாவளியைவிட மஹிந்த ராஜபக்ஷவினால் ஏற்படுத்தப்பட்ட சூறாவளியினாலேயே நாட்டுக்கு பாரிய பாதிப்புகள் ஏற்பட்டது என்பதை ஞாபகப்படுத்துவதாக கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஒன்றிணைய வேண்டும் என பலரும் தெரிவித்து வருவது தொடர்பில் அவரிடம் ஊடகவியலாளர்கள் நேற்று வினவிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், யார் என்ன கூறினாலும் அரசாங்கம் என்ற வகையில் நாம் எமது பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 70 வீதமான வெற்றி எமக்கு கிடைக்கும் என்பதில் நாம் நம்பிக்கையுடன் காணப்படுகிறோம்.

அதேவேளை, எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு விலகுவதற்கான எண்ணம் தனக்கு இல்லையென்றும், எந்த ஒரு சூழ்நிலையிலும் புதிய அரசியல் கட்சியொன்றில் இணைய போவதில்லை என்றும் உறுதியாகக் குறிப்பிட்டார்.

மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்து வினவிய போது, உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறுவது உறுதி என்று குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg