Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனித குலத்தை பாதுகாக்க உலகத் தலைவர்கள் முன்வர வேண்டும் – பாப்பரசர்

In உலகம்
Updated: 04:06 GMT, Dec 3, 2017 | Published: 04:06 GMT, Dec 3, 2017 |
0 Comments
1261
This post was written by : Suganthini

மனித குலத்தை பேரழிவிலிருந்து பாதுகாக்க உலகத் தலைவர்கள் முன்வர வேண்டுமென, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரோஹிங்கியா முஸ்லிம்களின் நெருக்கடிக்குத் தீர்வு காணும் நோக்கில் மியன்மார் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்த பாப்பரசர், தனது விஜயத்தை முடித்துக்கொண்டு பங்களாதேஷிலிருந்து ரோமுக்கு நேற்று (சனிக்கிழமை) புறப்பட்டுச் சென்றுள்ளார். இதன்போது,  ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘அணுவாயுத பாவனை தொடர்பாக உலகம் சட்ட வரையறைக்கு  உட்பட்டிருந்தது. தற்போது அவ்வாறான நிலைமை இல்லாத நிலையில்,  இது மனித குலத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுகின்றது’ என்றார்.

எனவே, மனித குலத்தை பேரழிவிலிருந்து பாதுகாக்க உலகத் தலைவர்கள் முன்வர வேண்டும்’ எனவும் வலியுறுத்தியுள்ளார்.

‘ஆபத்து விளைவிக்கும் அணுவாயுதங்களைப் பயன்படுத்த முற்படுவது, பகுத்தறிவற்ற தன்மை’ எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட பாப்பரசர், அம்முஸ்லிம்களுக்கான உரிமைகள் மதிக்கப்பட வேண்டிய அவசியம் தொடர்பாகவும் மியன்மார் ராணுவத்தினருடனான சந்திப்பின்போது இறுக்கமான போக்கைக் கடைப்பிடித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg