Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கார்த்திகை திருநாள்: திருவண்ணாமலை உச்சியில் மஹா தீபம்

In இந்தியா
Published: 04:49 GMT, Dec 3, 2017 |
0 Comments
1254
icon_com
This post was written by : Risha

கார்த்திகை திருநாளை முன்னிட்டு, ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் மஹா தீபம் ஏற்றப்பட்டது.

கோயிலின் பின்புறத்தில் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் நேற்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு மஹா தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்த காட்சியை கோடிக்கணக்கான மக்கள் கண்டு வழிபட்டனர்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா கடந்த மாதம் 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில், 10ம் நாளான நேற்று காலை முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது.

சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் அதிகாலை ஏற்றபட்டது. இதன்போது, பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அருணாச்சலேஸ்வரர் தரிசனம் பெற்றனர். இதனை தொடர்ந்து மாலை மஹா தீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை திருநாள் திருவண்ணாமலையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பஞ்ச பூதங்களில் நெருப்புக்குரிய தலமாக திகழ்வது இந்த திருத்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg