Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனியில் ஏ.எப்.டி. கட்சிக்கு புதிய தலைமைத்துவம்

In ஐரோப்பா
Published: 05:00 GMT, Dec 3, 2017 |
0 Comments
1142
icon_com
This post was written by : Suganthini

ஜேர்மனியில் அதிதீவிர வலதுசாரிக் கட்சியான ஏ.எப்.டி. கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

மேற்படி கட்சியின் மாநாடு நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றபோதே, புதிய தலைமைத்துவம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இம்மாநாட்டின்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஏ.எப்.டி. கட்சியின் நிறைவேற்றுத் தலைவராக Joerg Meuthen போதியளவான வாக்குகளைப் பெற்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்தக் கட்சியின் புதிய இணைத் தலைவராக அலெக்ஸாண்டர் கௌலண்ட் (Alexander Gauland) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும், ஏ.எப்.டி. கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட Georg Pazderski போதியளவான வாக்குகளைப் பெற்றுக்கொள்ளாமையால், தோல்வியடைந்துள்ளார்.

ஏ.எப்.டி. கட்சியின் மாநாடு நடைபெறவிருந்த நிலையில், அக்கட்சிக்கு எதிராக நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்கார்கள் ஒன்றுகூடி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் நடத்தியிருந்தனர். பாரிய எதிர்ப்புக்கு மத்தியிலேயே ஏ.எப்.டி.கட்சியின் மாநாடு நடைபெற்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)