Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல்போன 18 மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன

In இந்தியா
Updated: 05:01 GMT, Dec 3, 2017 | Published: 05:00 GMT, Dec 3, 2017 |
0 Comments
3616
This post was written by : Elakkiya

மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் கடலில் காணாமல்போயிருந்த மீனவர்கள் 18 பேரின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

ஓஹி புயல் காரணமாக கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான மீனவர்கள் திசைமாறி காணாமல் போயிருந்த நிலையில் கேரள மாநிலம் கொல்லம் துறைமுகத்தில் 10 மீனவர்களின் சடலங்களும் விழிஞ்ஞம் துறைமுகம் அருகில் 8 மீனவர்களின் சடலங்களும் கரையொதுங்கியுள்ளன.

இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்கள் தமிழகத்தை சேர்ந்த மீனவர்களா என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை கன்னியாகுமரி குளச்சல் அருகில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 19 தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேபோன்று, கவரதீவு அருகில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, 952 மீனவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகராஷ்டிர மாநில கடல் பகுதியில் 66 கேரள படகுகள் மற்றும் 2 தமிழக படகுகளுடன் 952 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். மேலும், காலநிலை சீராகியதும் மீனவர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg