Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இங்கிலாந்திடம் போராடித் தோற்றது இந்தியா!

In விளையாட்டு
Published: 05:02 GMT, Dec 3, 2017 |
0 Comments
1122
icon_com
This post was written by : Puvanes
india001

உலக ஹொக்கி லீக் சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியஅணி, இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்துள்ளது.

ஒடிசாவில் நேற்று (சனிக்கிழமை) இந்திய – இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை செய்துகொண்டன. பலம்வாய்ந்த இரு அணிகள் இந்தப் போட்டியில் மோதிக் கொண்டதால் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்பட்டது.

போட்டி ஆரம்பித்த 25 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் குட்பீல்ட் டேவிட் ஒரு கோலை அடித்தார். அதனைத் தொடர்ந்து 43ஆவது நிமிடத்தில் வோர்ட் சேம் மற்றுமொறு கோலை அடிக்க இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

அதனைத்தொடர்ந்து இந்திய அணி அதிரடியைக்காட்டி 47ஆவது நிமிடத்தில் ஆகாஷ்தீப் மூலமாக ஒரு கோலையும், 50ஆவது நிமிடத்தில் ரூபிந்தர்பால் சிங் மூலம் மற்றுமொரு கோலையும் பெற்றுக்கொள்ள ஆட்டம் சமநிலையடைந்தது.

தொடர்ந்து கோலுக்காக போராடிய இருஅணிகளில் 57ஆவது நிமிடத்தில் வோர்ட் சேம் மற்றுமொறு கோலை அடித்தார். இறுதியில் 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்து, இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg