Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சைக்கிள் இல்லையேல் பூ – உதயசூரியனில் கேட்க மாட்டோம் வாக்கு: கஜேந்திரகுமார் பிடிவாதம்

In இலங்கை
Updated: 06:16 GMT, Dec 3, 2017 | Published: 05:12 GMT, Dec 3, 2017 |
0 Comments
1323
icon_com
This post was written by : Risha
TNPF-

மோசமான கொள்கையுடைய தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணைந்து உதய சூரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் ஆசியுடன் பொது கூட்டணியாக தேர்தலில் களமிறங்க தீர்மானித்தவர்களுக்கு பொதுச் சின்னம் கிடைக்காத நிலையில், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”சின்னத்தை பெறுவதில் சிக்கல் எனில் சைக்கிள் சின்னத்தில் பொது கூட்டணி தேர்தலில் போட்டியிடலாம். அதற்கு ஏனையவர்களுக்கு விருப்பம் இல்லை எனில் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடவும் நாம் தயார்.

அதனை விடுத்து மிக மோசமான கொள்கையுடைய தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நாம் ஒரு போதும் தயார் இல்லை” என தெரிவித்தார்.

சுரேஷ் பிரேமசந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோர் உள்ளூராட்சி தேர்தலில் பொது கூட்டணியாக போட்டியிட போவதாகவும், அக் கூட்டணி பொது சின்னம், மற்றும் பொது பெயரில் போட்டியிடும் எனவும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

அதுதொடர்பில், தேர்தல் ஆணையகத்தில் பொது பெயரை பதிவு செய்து பொது சின்னத்தை பெற முயன்ற போது, தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அவற்றை பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் பொது சின்னம், பொது பெயரில் தேர்தலில் போட்டியிடும் திட்டம் கைவிடப்பட்டு உள்ளதாக அறியமுடிகிறது.

இதனால் பொது கூட்டணி, தமிழர் விடுதலை கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த முயற்சிக்கு ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமசந்திரனும் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழர் விடுதலை கூட்டணியின் உருவாக்கத்தின்போது ஜீ.ஜீ. பொன்னம்பலம் இணைந்திருந்தபோதும் பின்னர் அதனுடன் இணைந்து செயற்படுவதில் ஆர்வம் காட்டவில்லை. அதேபோன்று மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களும் இறுதிவரை உதயசூரியனுக்கு எதிரான அரசியலையே மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் தற்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் உதயசூரியனை ஏற்றுக் கொள்வதில் பிடிவாதமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg