Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவனொளிபாதமலைக்கான யாத்திரைக்காலம் ஆரம்பம்!

In ஆன்மீகம்
Updated: 05:30 GMT, Dec 3, 2017 | Published: 05:29 GMT, Dec 3, 2017 |
0 Comments
1168
icon_com
This post was written by : Risha
DSC_4271

2018ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்காலம் பூரணை தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.

சிவனொளிபாதமலைக்கு வருகைத்தரும் யாத்திரிகர்களின் நலன் கருதி நல்லதண்ணீர் நகரில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்துக்கு மேலதிகமாக சீத்தகங்குலதன்ன, இந்திக்கட்டுபான, மழுவ முதலான இடங்களில் தற்காலிக பொலிஸ் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த யாத்திரைக்காலத்தில் மதுபானப் பொருட்கள் மற்றும் இசைக்கருவிகளை எடுத்துச் செல்வதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

இதேவேளை, பொதுச் சூழல் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பிளாஸ்ரிக் பொருட்களை கொண்டு செல்வதற்கும் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ள சிவனொளிபாத மலையிலுள்ள 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பானது, கௌதம புத்தரின் காலடி சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது.

இதேவேளை, இந்து சமயங்களின் நம்பிக்கைகளின்படி அது சிவனின் காலடி சுவடாக கருதப்படுவதோடு, இஸ்லாமியர்கள் இதை ஆதாமின் காலடி சுவடாக கருதுகின்றனர்.

இதனால் சிவனொளிபாத மலைக்கு மத வேறுபாடின்றி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

DSC_3828__1_ DSC_4424 DSC02612

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg