Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களமிறங்கும் விஷால்: நாளை வேட்புமனு தாக்கல்

In இந்தியா
Published: 05:19 GMT, Dec 3, 2017 |
0 Comments
1172
icon_com
This post was written by : Elakkiya
actor-vishal-facebook_650x400_51512230949

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். முன்னணி நடிகராகவும் வலம்வரும் விஷால் நேற்று (சனிக்கிழமை) ஊடகம் ஒன்றுக்கு மேற்படி தகவலை அறிவித்துள்ளார்.

இதன்போது, “நான் ஒரு சுயாதீன வேட்பாளராக போட்டியிடவுள்ளேன். மக்கள் எதை வேண்டுமானாலும் என்னிடம் கேட்கலாம் அதை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்” என்று தெரிவித்துள்ளார்

இதே தகவலை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள விஷால், “எதிர்வரும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் தீர்மானித்துள்ளேன். அதற்கான வேட்புமனுவை டிசம்பர் 4 ஆம் திகதி திங்கட்கிழமை சமர்பிக்கவுள்ளேன். மாற்றத்திற்கான நம்பிக்கையுடன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் நிறைவடைகின்றது. எதிர்வரும் 7 ஆம் திகதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. என ஆறு முனைகளில் போட்டி நிலவுகின்றது. தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், டி.டி.வி. தினகரன், ஆகியோர் ஏற்கனவே வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

நாளையதினம் பாஜ கரு.நாகராஜன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, நடிகர் விஷால் ஆகியோர் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg