Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விராட் கோஹ்லி இயற்கைக்கு மாறான தலைசிறந்த வீரர்!

In கிாிக்கட்
Published: 05:23 GMT, Dec 3, 2017 |
0 Comments
1861
icon_com
This post was written by : Puvanes
virat001

இந்த தலைமுறையின் தலைசிறந்த வீரர் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி என இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

பீட்டர்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு ஒன்றின் மூலமாகவே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலகில் தலைசிறந்த தலைவராகவும் விராட் காணப்படுகின்றார் எனக் குறிப்பிட்டுள்ள அவர், தற்போது உள்ள கிரிக்கெட் வீரர்களில் கோஹ்லி முற்றிலும் மாறுபட்டவர். இதனால் அனைத்து வகைகளிலும் அவர் சிறப்பாகச் செயற்படுகின்றார் எனவும் பீட்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, இங்கிலாந்தின் மற்றுமொரு முன்னாள் கிரிக்கெட் பிரபலமான மைக்கல் வாகனும், கோஹ்லி இயற்கைக்கு மாறாக செயற்படக்கூடிய அபாராமான வீரர். அதுமட்டுமல்லாது உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் என டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg