Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போர்த்துக்கல்லுக்கு பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் கோர்பின் விஜயம்

In
Published: 05:32 GMT, Dec 3, 2017 |
0 Comments
1132
icon_com
This post was written by : Suganthini

ஐரோப்பிய ஒன்றிய சோசலிஸ பேரவையின் கூட்டத்தில், பிரித்தானியாவின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின் (Jeremy Corbyn) கலந்துகொண்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய சோசலிஸ பேரவையின் கூட்டம், போர்த்துக்கல்லின் தலைநகரான லிஸ்பன்னில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தையடுத்து, போர்த்துக்கல் பிரதமர் அந்தோனியோ கொஸ்டாவைச் (Antonio Costa ) சந்தித்து, இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக, பிரித்தானியாவின் எதிர்க்கட்சித்  தலைவர் ஜெர்மி கோர்பின்   கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை, ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த பிரித்தானியாவின் எதிர்க்கட்சித்  தலைவர்  ஜெர்மி கோர்பின், இளம் தலைமுறையினர் சிக்க நடவடிக்கைகளைப் பாதுகாக்க கூட்டணிகளை உருவாக்கும் வகையில், தான் போர்த்துக்கலுக்கு வருகை தந்ததாகக் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg