Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிவேக சதம் அடித்து 115 வருடகால சாதனையை முறியடித்தார் நியூசிலாந்து வீரர்!

In கிாிக்கட்
Published: 06:02 GMT, Dec 3, 2017 |
0 Comments
4981
icon_com
This post was written by : Puvanes
grand001

முதலாவது சதத்தினை அதிவேகமாக எட்டிய வீரர் என்ற சாதனையை நியூசிலாந்து அணி வீரர் டி கிரான்ட்ஹோம் படைத்துள்ளார்.

நியூசிலாந்து எதிர் மேற்கிந்தியத்தீவுகள் மோதிக்கொண்ட முதலாவது டெஸ்ட்போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று இடம்பெற்றது. இதில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 520 ஓட்டங்களைக் குவித்தது.

குறித்தபோட்டியில் சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய கிரான்ட்ஹோம் தனது முதலாவது சதத்தினைப்பதிவு செய்தார். இந்தப்போட்டியில் 71 பந்துகளுக்கு முகம் கொடுத்த அவர் 105 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இதன்மூலம் முதலாவது சதத்தினை குறைவான பந்துகளில் அதிவேகமாக பெற்றுக்கொண்ட வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தினைப் பெற்றுச் சாதனைப்படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் 1902ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் கில்பெர்ட் ஜெசொப் 76 பந்துகளில் முதலாவது சதத்தினைப் பெற்றதே சாதனையாக காணப்பட்டது. அதனைத்தொடர்ந்து 115 வருடங்கள் கழித்து அந்தத் சாதனையை கிராணட்ஹோம் முறியடித்துள்ளார்.

அதேபோன்று நியூசிலாந்து வீரர்களில் அதிவேகமாக சதம் அடித்த வீரர்களில் பட்டியலில் இரண்டாம் இடத்தினையும் கிரான்ட்ஹோம் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சில், முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 134 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுகளையும் இழந்திருந்தது.

அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆரம்பித்த நியூசிலாந்து முதல் நாள் ஆட்டத்தில் இரண்டு விக்கெட்டுகளுக்கு 85 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தொடர்ந்து நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)